பழங்கள் என்றாலே ஆரோக்கியம் தான், அதில் அத்திப்பழத்திற்கு எப்போதும் தனிச்சிறப்பு உண்டு, அதன் பலன்களை காண்போம் வாங்க..
அத்திப்பழத்தில் வைட்டமின் A , C , B , K , பொட்டாசியம், மெக்னீசியம் , கால்சியம் , இரும்புச்சத்து ஆகியவை உள்ளது. இதில் சீமை அத்திப்பழம் , நாட்டு அத்திப்பழம் என இரு வகை உண்டு. நாள் ஒன்றுக்கு 2 அத்திப்பழம் சாப்பிடுவதால் ரத்த உற்ப்பத்தி அதிகரிக்கிறது.
உலர்ந்த அத்திப்பழத்தில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் ரத்த சோகைக்கு சிறந்தது. அத்தி மர இலையை உலறவைத்து பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிடுவதால் பித்தம் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
தினம் ஒரு அத்திப்பழம் சாப்பிட்டால் உடலுக்கு தேவையான 3 % கால்சியம் கிடைக்கிறது. வாய்ப்புண், ஈறுகள் சீல் பிடிப்பதை சரிசெய்ய, அத்தி மர இலையை கொதிக்கும் தண்ணீரில் போட்டு அந்த தண்ணீரில் வாய் கொப்பளித்து வந்தால் சீக்கிரம் குணமாகும்.
இரவில் பசும்பாலில் காய்ந்த அத்திப்பழங்களை ஊறவைத்து, அந்த பாலை, காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் பலம் பெற்று, நரம்பு குறைபாடுகள் சரியாகும்.
வாரம் 2 முறை அத்திப்பழம் சாப்பிடுவதால் கண்பார்வை பிரகாசமாகும். தொடர்ந்து அத்திப்பழம் சாப்பிடுவதால், பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்ப்படும் முடி உதிர்வு கட்டுப்படுத்த படுகிறது.
வாதநோய், மூட்டு வலி உள்ளவர்கள் அத்தி மர பட்டையை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, அந்த தண்ணீரை காலையில் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். சீமை அத்திப்பழம் வெண் குஷ்டத்தை சரிசெய்யும் தன்மை கொண்டது.
அத்திப்பழம் புற்று நோயை தடுக்கும் தன்மை கொண்டது. இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உடலில் கொழுப்பு சேராமல் தடுக்கிறது. அத்திப்பழத்தை தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டுவர உடல் வலிமை பெரும்.