வெப்ப மண்டல நாடுகளில் அதிகம் விளையும் “கொய்யா பழம்” பலராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு பழ வகையாகும். கொய்யா பழத்தில் செம்பு சத்து அதிகம் உள்ளது. செம்பு சத்து தைரொய்ட் சுரப்பியை மற்றும் அது சுரக்கும் ஹார்மோன்களின் சமசீர் தன்மையை மேம்படுத்தி உடல் நலத்தை பாதுகாக்கிறது.
கொய்யா பழம் ரத்தத்தில் அதிகம் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது. ரத்தம் அதிகம் கெட்டியாகாமல் அதன் நீர்ம தன்மையை பாதுகாக்கும் சக்தியும் கொய்யா பழத்திற்கு உண்டு. இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு அவர்களின் உடலில் இருக்கும் ரத்தத்தில் நச்சுக்களை அனைத்தும் நீங்கி ரத்தம் சுத்தமாகிறது. ரத்ததின் அளவை அதிகரிக்கவும் செய்கிறது.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கொழுப்புகள் நிறைந்த உணவுகள் தவிர்த்து, முறையான உடற்பயிற்சிகளை செய்வதுடன் கொய்யா பழத்தையும் அவ்வப்போது உண்பதால், அடிக்கடி பசி ஏற்படுவது தடைபடுகிறது.
நீரிழவு நோயாளிகள் அவ்வப்போது கொய்யா பழம் சாப்பிடுவது நல்லது. தினந்தோறும் காலை அல்லது மதியத்தில் ஒரு கொய்யா பழம் சாப்பிடுவது மலச்சிக்கல் பிரச்னையை விரைவில் தீர்க்கும். அல்சர், குடல்களில் ஏற்படும் புண்களையும் ஆற்றும் தன்மை கொண்டது.
கொய்யா பழத்தில் “வைட்டமின் சி” சத்து அதிகம் இருக்கிறது. இந்த வைட்டமின் சி சக்தி நமது உடலில் சரியான அளவில் இருந்தால் மட்டுமே நமது உடலின் நோய் எதிர்ப்பு திறன் வலுவுடன் இருந்து, உடலை வெளியிலிருந்து தாக்க வரும் நோய் நுண்கிருமிகளை எதிர்த்து போராட முடிகிறது. எனவே அனைத்து வயதினரும் கொய்யா பழத்தை அடிக்கடி சாப்பிடுவது மிகவும் நல்லது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh