முகத்தை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள அழகு குறிப்புகள்

 

ஒரு கிண்ணத்தில் கடலை மாவை எடுத்து அதில் தயிர் , எலுமிச்சை சாறு ஊற்றி நன்றாக கலந்து முகத்தில் தடவ வேண்டும். சில நிமிடங்கள் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் எண்ணெய் பசை நீங்கி முகம் பொலிவு பெறும்.

உங்கள் சருமத்தை ஈரப்பதமாக வைத்துக்கொள்ள ஒரு நல்ல டோனரை நீங்கள் கொண்டிருப்பது அவசியம். உங்கள் சருமத்தை சுத்தப்படுத்திய பிறகு, ஒரு டோனரைப் பயன்படுத்தி உங்கள் சருமத்தை ஈரப்படுத்தவும்.

 

ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கடலை மாவை எடுத்துக்கொண்டு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவி வந்தால் சருமம் மென்மையாகும்.

 
 
Exit mobile version