காளான்களில் இருக்கும் சத்துக்களை பற்றி தெரிந்து கொண்டால் அதை யாரும் சாப்பிடாமல் இருக்க மாட்டோம், அதன் பலன் தெரிந்து தான் இன்று கடைகளில் அதிகம் விற்பனை ஆகிறது. காளான் வளர்ப்பு பல பேருக்கு நல்ல தொழிலாகவும் இருந்து வருகிறது. அதன் நன்மைகளை கீழே காண்போம்.
தினமும் காளான் சூப் அருந்துவதால், பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் தடுக்கப்படுவதாக சில ஆய்வுகள் கூறுகிறது.
காளானில் புரதசத்து உள்ளது, இதில் அமினோ அமிலங்கள் உள்ளதால் குழைந்தகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாகும். காளான் ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைத்து, ரத்தத்தை சுத்தம் செய்கிறது. ரத்த குழாய்களில் உள்ள கொழுப்பு அடைப்பை சரி செய்கிறது. இதில் கால்சியம் சத்து உள்ளதால், எலும்பு சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது, எலும்புக்கு வலிமை தருகிறது.
காளான் தொடர்ந்து சாப்பிடுவதால் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. புதியதாக ரத்த சிவப்பனு உருவாகிறது. இது சிறந்த நோய் எதிர்ப்புசக்தி அளிக்கிறது. அல்சரை குணப்படுத்துகிறது. காளானில் பொட்டாசியம், விட்டமின் D, விட்டமின் C, போன்ற சத்துக்கள் உள்ளது.
குறிப்பு:
காளான்களில் நிறைய வகை உண்டு, சாப்பிட கூடாத வகைகளும் உண்டு, அவற்றை தெரிந்துகொண்டு உண்பது சிறந்தது. கலர் கலராக இருப்பதெல்லாம் விஷ காளானாகவும் இருக்கலாம்.
பாலூட்டும் தாய்மார்கள் காளாணை தவிர்ப்பது நல்லது, இது தாய்ப்பாலை குறைக்கும் தன்மை இதில் உள்ளது.