ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் நெல்லிக்காயின் நன்மைகளை கீழே காண்போம்.
தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் 3 ஆப்பிள் களின் பலன் கிடைக்கும். நெல்லிகாயில் வைட்டமின் C – 600 மில்லி கிராம் அளவு உள்ளது. இதில் கால்சியம் மற்றும் புரதம் போன்ற சத்துக்களும் அதிகம் உள்ளது.
நெல்லிக்காய் சாறு ( ஜூஸ் ) யை தினமும் காலையில் குடித்துவந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும். உடல் பருமன் பிரச்சனையில் இருந்து விடுபட நெல்லிக்காய் ஜூஸ் முக்கியப் பங்குவகிக்கிறது. தினமும் நெல்லிக்காய் ஜூஸ் அருந்துவதால் உடல் எடை விரைவில் குறையும்.
நெல்லிக்காய் தொடர்ந்து சாப்பிடுவதால், ரத்தத்தில் உள்ள கழிவுகள் சிறுநீர் வழியாக வெளியேறுவதோடு, ரத்தம் சுத்தமாகி உடல் உறுப்புகள் சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் A மற்றும் C சத்துக்கள் முடியின் வேர்களுக்கு வலுசேர்த்து, முடி உதிர்வத்தை குறைத்து, முடி கருமையாகவும், செழிப்பாகவும் வளர உதவுகிறது.
நெல்லிக்காயில் பொட்டாசியம், கால்சியம் சத்துக்கள் அதிகம் இருப்பதால், இது மனித உடல் எழும்புகளின் வலிமைக்கும், வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது.
நெல்லிக்காய் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு சருமத்தில் உள்ள செல்கள் புத்துணர்வு பெற்று, ரத்த ஓட்டம் தூண்டப்பட்டு சருமத்தில் சுருக்கங்கள் ஏற்ப்படாமல் தடுக்கிறது. நெல்லிக்காய், சர்க்கரை நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.
நெல்லிக்காய் இதயத்திற்க்கு, மூளைக்கு, நோய் எதிர்ப்பு சக்தி என உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை தருகிறது. எனவே தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வோம்.
