தமிழ்நாடுமாவட்டம்

தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்படுமா? சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!!

தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? என்ற அச்சம் எழுந்ததை நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா மாறுபாடு காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 269ஆக அதிகரித்துள்ளது. ஒமைக்ரான் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், டெல்லி இரண்டாவது இடத்திலும், தமிழ்நாடு மூன்றாம் இடத்திலும் உள்ளது.

ஒமைக்ரான் தொற்று அதிகம் கண்டறியப்படும் பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அறிவுறுத்தியுள்ளார். இரவு நேர ஊரடங்கு, பொதுமக்கள் கூட்டமாக கூட தடை போன்ற கட்டுப்பாடுகளை விதிக்கவும் அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்த நிலையில், 10 விழுக்காடுக்கு மேல் கொரோனா பாதிப்பு இருந்தால் கட்டுப்பாடுகள் விதிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பெரும்பாலானோர் முதல் தவணை தடுப்பூசியை கூட இன்னும் செலுத்தாமல் உள்ளனர். தடுப்பூசி செலுத்துவது, முகக்கவசம் அணிவது மூலம் தொற்று பரவலை குறைக்க முடியும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: