ஆரோக்கியம்

தூங்கமின்மையால் பெண்கள் சந்திக்கும் உடல்நலப் பிரச்சனைகள்!!

ஆணைவிடப் பெண் ஒரு மணி நேரம் அதிகமாகத் தூங்க வேண்டும்’ என்று அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள்.
குறைந்தது ஓர் ஆண் ஆறு மணி நேரமும், பெண் ஏழு மணி நேரமும் தூங்க வேண்டும் என்பது பொதுவாக மருத்துவர்கள் தெரிவிக்கும் கருத்து.

பல பெண்கள் வீட்டு வேலைகளோடு அனைவரிடமும் அனுசரித்துச் செல்ல வேண்டும் என்பதற்காகவே கண்டதையும் நினைத்து அதிகமாகச் சிந்திப்பார்கள்.
மூளைச் செயல்திறனை மீட்டுருவாக்கம் செய்ய அவர்கள் அதிக நேரம் தூங்கவேண்டியது அவசியமாகிறது.

பெரும்பாலான பெண்கள் நான்கு அல்லது ஐந்து மணி நேரம் மட்டுமே உறங்குகின்றனர். நேரம் இருந்தும் தூக்கம் வராத, தூங்காத பெண்களும் இருக்கிறார்கள். இப்படி மிகக் குறைவான நேரம் தூங்குவதால் பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. தேவையான நேரத்தைவிட குறைவாகத் தூங்கும்போது மூளையின் செயல்திறன் வெகுவாகப் பாதிக்கப்படும்.

மூளைச் செயல்திறனை மீட்டுருவாக்கம் செய்யப் போதுமான கால அவகாசம் வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு நாளும் உற்சாகத்துடனும், உத்வேகத்துடன் செயல்பட முடியும்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: