ஆரோக்கியம்

சோளம் தரும் ஆரோக்கிய நன்மைகள்!!

வைட்டமின்கள்:

பச்சையாக உள்ள நூறு கிராம் சோளத்தில் உள்ள விட்டமின்களின் அளவுகள், – 2.00 மிகி வைட்டமின் ஏ (ரெட்டினால் அல்லது கரோட்டின்), – 0.06 மிகி வைட்டமின் பி 1 (thiamin, தையமின்) (சோளம், – 0.08 மிகி வைட்டமின் B2 அல்லது ரிபோப்லாவின் (சோளம், – 0.20 மிகி வைட்டமின் B6 அல்லது பைரிடாக்சின், – 18.00 வைட்டமின் சி அல்லது அஸ்கார்பிக் அமிலம் மிகி, – 0.00 மிகி வைட்டமின் ஈ அல்லது தொக்கோபெரோல்.

சோளத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களின் விபரம்:

வெள்ளைச் சோளம் அரிசியைப் போன்ற தன்மையையும் அதைவிடப் பல சத்துக்களையும் கொண்ட உணவுப் பொருள் ஆகும். சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம், கொழுப்பு, மற்றும் நார் சத்துக்கள் அடங்கி உள்ளன. . இவ்வகை சிறுதானியங்களில் குறைந்தளவே குளுகோஸ் இருப்பதால் இவை மனிதனை சர்க்கரை நோயிலிருந்து காப்பாற்றக் கூடியவை.

ஆற்றல்-349 கி.கலோரி

புரதம்-10.4 கிராம்

கொழுப்பு-1.9 கி

மாவுச்சத்து – 72.6 கி

கால்சியம் – 25 மி.லி

இரும்புசத்து 4.1 மி.கி,

பி-கரோட்டின் – 47 மி.கி

தயமின் – 0.37 மி.கி

ரிபோப்ளோவின் 0.13 மி.லி

நயசின் – 3.1 மி.கி.

மருத்துவ பயன்கள்:

சோளத்தில் அதிகளவு மாவுசத்து, நார்சத்தும் அடங்கியுள்ளதால் இது ஒரு சக்தி தரும் உணவாக திகழ்கிறது.

குலூட்டான் எனும் வேதிப்பொருள் சோளத்தில் இல்லாத காரணத்தால் கோதுமை ஒவ்வாமை உள்ளவர்களும் சோளத்தை சாப்பிடலாம்.

கோதுமையில் உள்ள புரதத்தைவிட சோளத்தில் உள்ள புரதம் சிறப்பு வாய்ந்தது.

சோளத்தில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளதால் இது மலச்சிக்கலுக்கு ஏற்ற உணவாகவும் உள்ளது.

நீரிழிவு நோயை குறைக்கும் தன்மை கொண்டதால் நீரிழிவு நோயாளிகளுக்கு இது சிறந்த உணவாகும்.

சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி இதற்கு இருப்பதால், உடம்பில் உள்ள உப்பைக் கரைக்கும் தன்மை உண்டு.

இரும்புசத்து, ரத்த சோகை குறைபாட்டை போக்கும் சோளம்

வைட்டமின் பி 12 குறைபாடு, இரும்புசத்து, ரத்த சோகை குறைபாட்டை போக்கும் சோளம்பேஃலிக் ஆசிட் சத்து குறைபாட்டால் ஏற்படும் இரும்புசத்து, ரத்த சோகை பிரச்சனையை போக்கும் தன்மை கொண்டது சோளம்.

காய்கறி கடைகளில் இலையுடன் கூடி சோளம் காணப்படும். இது தானிய வகையைச் சார்ந்தது. வெள்ளை, மஞ்சள் என இருந்த சோளம் இன்று பல நிறங்களில் கிடைக்கின்றது.

நார்சத்து மிகுதியின் காரணமாக ஜீரணத்திற்கு உகந்தது. கொழுப்பு சத்து ரத்தத்தில் சேரவிடாமல் தடுக்கின்றது. மலச்சிக்கல் நீக்குகின்றது. சில குடல் நோய் பாதிப்புகள் தவிர்க்கப்படுகின்றன. பைல்ஸ் பாதிப்பு தடுக்கப்படுகின்றது. மலச்சிக்கல் இராது.

அதிக கார்போஹைடிரேட் கொண்டதினால் சோளம் நிறைந்த சக்தியினை அளிக்கின்றது. மூளை, நரம்பு மண்டலம் நன்கு செயல்பட உதவுகின்றது. விளையாட்டு வீரர்களுக்கு ஏற்ற உணவாக சோள வகை உணவுகள் கருதப்படுகிறது.

சோளத்தின் பயன்கள்:

சோளம் அமெரிக்காவில் மற்ற தானியங்களைவிட அதிக அளவு உபயோகப்படுத்தப்படுகிறது. இதில் அதிக அளவு மாவுச்சத்து, கொழுப்பு மற்றும் புரதம் நிறைந்து உள்ளதால் சத்தான உணவாக இது கருதப்படுகின்றது.

உணவுக்காக மேலைநாடுகளில் அதிக அளவில் இவை பயிரிடப்படுகின்றது. மக்காச்சோள அவல் அதிக அளவு காலை சிற்றுண்டிக்கு பயன்படுகின்றது. வளர்ந்த நாடுகளில் கால்நடை தீவனத்திற்காகவும் சோளம் பயன்படுகின்றன.

இது கஞ்சி சர்க்கரை (சோளசர்க்கரை, டெக்ஸரின்) காகன் சிரப் தொழிற் ஆல்கஹால் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது.

சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்க வல்லது ஆகும். இவை உடல் பருமனைக் குறைக்கும், வயிற்றுப்புண்ணை ஆற்றும். இவை வாய் நாற்றத்தைப் போக்கும்.

சோளம் பால் உற்பத்தியை அதிகரிக்கவல்லதாகும். சோளக்கழிவுகள் கறவை மாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படுகின்றன.

சோளம் உயிரி எரிபொருள் தயாரிப்பிற்கும் பயன்படும் முக்கிய பொருளாகும்.

கெட்ட கொழுப்பினை நீக்குகின்றது. வைட்டமின் சி சத்து மிகுந்தது.எடை குறைந்தவர்கள் இதனை உட்கொள்ள எடை கூடுவர்.

தசை, தசை நார்கள் வலுப்படும்.

கண் பார்வை தேய்மானம் வெகுவாய் குறையும். கண் பார்வை அதிகரிக்கும்.

கல்லீரல் மார்பக புற்றுநோய் தவிர்க்கப்படுகின்றது.

கர்ப்ப காலத்தில் சிறந்த உணவு.

ஒமேகா 3 ஆசிட் கொண்டதால் இருதய பாதுகாப்பாகின்றது. வாதம், மாரடைப்பு வராமல் தடுக்க உதவுகின்றது.

லிட்டர் கரோடின் உள்ளதால் சருமம் நன்றாக இருக்கும்.

முடி வளர்ச்சி உறுதியாகி நன்றாக இருக்கும்.முடி வறட்சி இராது.

எலும்புகள் வலுவாகின்றன.

சிவப்பு ரத்த அணுக்கள் உருவாக உதவுகின்றன.

சோளம் கொண்டு அதிக தென்னிந்திய உணவு வகைகளை தயாரிப்பது எளிது.

சோள இட்லியில் அதிக அளவில் இரும்புச்சத்து உள்ளதால் கர்ப்பிணிகள், குழந்தைகள் தினமும் சாப்பிடலாம்.

ரத்தசோகையைத் தடுத்து நல்ல ஆரோக்கியத்தை தரும்.

சர்க்கரை நோயாளிகள் தினமும் இரவு உணவாக சோள ரொட்டியை எடுத்து வருவதன் மூலம், அவர்களது சர்க்கரை வியாதி குறைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

கொழுப்பை குறைக்க சோள ரொட்டி மிகவும் உதவும்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: