ஆரோக்கியம்தமிழ்நாடு

தலைமுடி அடர்த்தியினை அதிகரிக்கச் செய்யும் ஹேர் மாஸ்க்..!

தலைமுடி அடர்த்தியினை அதிகரிக்கச் செய்யும் ஹேர் மாஸ்க்குகளில் இந்த ஹேர் மாஸ்க் பெஸ்ட் ரிசல்ட்டினைக் கொடுப்பதாய் இருக்கும். நிச்சயம் இதை நீங்கள் வீட்டில் ட்ரை செய்யவும்.

தேவையானவை:

வெந்தயம்- 1 ஸ்பூன்

நெல்லிக்காய்- 2

பூண்டு- 4 பற்கள்

தயிர்- கால் கப்

தேங்காய் எண்ணெய்- 10 மில்லி

செய்முறை:

1. வெந்தயத்தை முந்தைய நாள் இரவே ஊறவைத்துக் கொள்ளவும்.

2. அடுத்து நெல்லிக்காய் மற்றும் பூண்டினை நறுக்கிக் கொள்ளவும். மிக்சியில் வெந்தயம், தயிர், நெல்லிக்காய் மற்றும் பூண்டினைப் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.

3. இறுதியில் இவற்றுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்தால் ஹேர் மாஸ்க் ரெடி.

இந்த ஹேர் மாஸ்க்கினை தலைமுடி, வேர்க் கால்கள் என அனைத்து இடங்களிலும் அப்ளை செய்து சீயக்காய் கொண்டு அலசினால் தலைமுடி நிச்சயம் அடர்த்தியாகும்.

Back to top button
error: Content is protected !!