ஆரோக்கியம்தமிழ்நாடு

தலைமுடியை மிருதுவாக்கும் விளக்கெண்ணெய் ஹேர்மாஸ்க்..!

தலைமுடி மிருதுவாக இருக்க வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது. கடைகளில் விற்கும் பல வகையான கிரீம்களை வாங்கிப் பயன்படுத்தியும் முடியினை மிருதுவாக்க முடியாமல், தலைமுடி உதிர்வினையே பலரும் சந்திக்கின்றனர். இப்போது நாம் தலைமுடியினை மிருதுவாக்குவது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

  • வெந்தயம்- 2 டீஸ்பூன்
  • விளக்கெண்ணெய்- 3 டீஸ்பூன்
  • பாசிப்பயறு- 3 டீஸ்பூன்
  • தேங்காய்- 5 கீற்று

செய்முறை:

1. தேங்காயினை அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்.

2. அடுத்து பாசிப்பயறையும், வெந்தயத்தையும் 3 மணி நேரம் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும்.

3. இதனை தேங்காய்ப் பாலில் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.

4. இறுதியில் விளக்கெண்ணெயினை சூடேற்றி, இந்தக் கலவையில் இதனைக் கொட்டிக் கிளறவும்.

இந்த பேஸ்ட்டினை முடியில் தடவவும், 20 நிமிடங்கள் கழித்து காய விடாமல் இதனை சீயக்காய் கொண்டு கழுவி விடவும். இப்போது உங்கள் முடியில் உள்ள மாற்றத்தினை நீங்களே காண்பீர்கள்.

இதையும் படிங்க:  பெண்களே! மாதவிடாய் வலியிலிருந்து விடுதலை வேண்டுமா? இந்த 4 வகை டீயை குடிச்சு பாருங்க..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: