ஆன்மீகம்

ராஜ வாழ்வு தரும் குரு ஆதிக்க எண்கள்!

யாருக்கெல்லாம் எண்களின் பலம், தேவைப்படுகிறது? போட்டிகள் மிகுந்த இந்த உலகில் நம் ஒவ்வொருவருக்குமே ஏதேனும் ஒரு வகையில் எண்களின் உதவி தேவை பட்டுக்கொண்டே தான் இருக்கும்.

குறிப்பாக வாழ்வில் தொட்டது அனைத்தும் தடைகளாக இருப்பவர்களுக்கும்,

பொருளாதார சிக்கல்களில் சிக்கித் தவிப்பவர்களுக்கும்,

திருமணத்தடை உள்ளவர்களுக்கும்,

எவ்வளவு முதலீடு போட்டாலும் லாபங்கள் தராத அல்லது வளர்ச்சி கொடுக்காத வியாபார நிறுவனங்களுக்கும்,

எண்கணித பெயர் ஒரு மாபெரும் ஆபத்பாந்தவனாகும்! தடைகளைத் தகர்த்து வெற்றி தரும் ஆயுதமாகும்!

எந்த எண்

பொதுவாக எண்கணிதத்தில் ஒரு சில குறிப்பிட்ட எண்கள் தான் வெற்றியை தரும் என்ற தவறான கருத்து உள்ளது. அது அப்படி கிடையாது, உங்களுடைய பிறந்த தேதிக்கும், கூட்டு எண்ணிற்கும், பிறப்பு நேர கிரக நிலைகளுக்கும் பொருந்தி உள்ளதா என்பதை சரி பார்த்துத்துத்தான் உங்களுக்கு எந்த எண் பொருந்தும் பொருந்தாது என்பதைக் கூறமுடியும்.

தவ வலிமையால்

நம் முன்னோர் மஹா ஞானிகள். ஒவ்வொரு விஷயத்தையும் தீர ஆராய்ந்து தங்களுடைய தவ வலிமையால் இறைவனிடம் வரமாகப் பெற்று நம் மனிதகுல மேன்மைக்காக பல விஷயங்களை நம்மிடம் கொடுத்துச் சென்றுள்ளனர்.

நம் முன்னோர்கள் அன்றே வகுத்து வைத்துள்ள நியதிகளை இன்றைய நவீன விஞ்ஞானம் ஒவ்வொன்றாக கண்டுபிடித்து அதில் உள்ள அறிவியல் பூர்வமான பலனை ஏற்றுக்கொள்கிறது.

48 நாட்கள்

உதாரணத்திற்கு, நம் முன்னோர்கள், நாம் செய்கிற ஒரு செயல் பலன் தருவதற்கு, ஒரு மண்டல காலம் நியமங்களை கடைபிடிக்க செய்தனர்.

ஒரு மண்டல காலம் என்பது 48 நாட்கள் ஆகும். இன்றைய நவீன மனோதத்துவ விஞ்ஞானமும் கூட இதை ஆராய்ந்து ஒரு மனிதன் தொடர்ந்து ஒரு செயலை இருபத்தொரு நாட்கள் செய்து வரும்பொழுது அது அவனுடைய ஆழ்மனதில் பதிந்து வேலை செய்வதாக கண்டறிந்தனர்.

இன்றைய நவீன விஞ்ஞான கூற்றின்படியே வைத்துக்கொண்டாலும், இரண்டு இருபத்தியோரு நாட்கள் 42 என்றாகிறது. இது கிட்டத்தட்ட நம் முன்னோர்கள் வகுத்து வைத்த ஒரு மண்டல காலமான 48 நாட்களுக்கு மிக நெருக்கமாக வருவதை பார்க்க முடியும்.

மேலும் நாற்பத்தி எட்டு என்பது 4+8 என்று சேர்ந்து 12= 1+2 = 3 ஆகிறது.

குருவின் ஆதிக்கம்

இந்த மூன்றாம் எண் மிகவும் ஆற்றல் பெற்ற குருவின் ஆதிக்கம் பெற்றது.

முக்காலமும் உணர்ந்து தன் படைப்புத் தொழிலை நிகழ்த்திவரும் பிரம்மனுக்கு குறியீடாக, மூன்று முகங்களை நம் முன்னோர்கள் கொடுத்துள்ளனர்.

உங்களுக்கு அமையும் மிகவும் சக்திவாய்ந்த பெயரானது எல்லா காலங்களிலும் உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரவல்லது செல்வச் செழிப்பை ஏற்படுத்தக்கூடியது.

இதையும் படிங்க:  வெற்றி தரும் புரட்டாசி பௌர்ணமி விரதம்!

உங்களுக்கும்,

உங்கள் வீட்டு குழந்தைகளுக்கும்,

வியாபார நிறுவனங்களுக்கும்,

மிகச்சிறந்த வளத்தைத் தரும் அதிர்ஷ்ட பெயர் அமைய வாழ்த்துகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: