தமிழ்நாடு

GST வசூல் ரூ.7,060 கோடியாக அதிகரிப்பு – நிதி அமைச்சகம் தகவல்!!

தமிழகத்தில் கடந்த ஜூலை மாதத்தை விட ஆகஸ்ட் மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ.7,060 கோடியாக உயர்ந்துள்ளது. தற்போது 35% ஜிஎஸ்டி அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மே மாதம் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. இதனால் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டது. இதனால் மக்கள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து மிகவும் சிரமப்பட்டனர். கொரோனா பெருந்தொற்று அச்சத்தில் வேலையின்றி வீடுகளில் முடங்கினர். இந்த நிலையில் அன்றாட தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். கொரோனா தடுப்பு பணியாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டது.

மாநிலம் பெரும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தது. அதன் பிறகு ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டது. அதன் விளைவாக தமிழகத்தின் ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.7,060 கோடியாக உயர்ந்துள்ளது. 2020 ஆகஸ்ட் மாதத்தை ஒப்பிடுகையில் தற்போது 35 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வரி ரூ.ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 393 கோடி வசூலாகியுள்ளது.

இந்தியாவில் 2021 ஆகஸ்ட் மாதம் வசூலிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1,12,020 கோடி. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.20,522 கோடி. மாநில ஜிஎஸ்டி ரூ. 26,605 கோடியாகும். ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.56,247 கோடி மேல்வரி(செஸ்) ரூ.8,646 கோடி. அதனை தொடர்ந்து புதுச்சேரியில் கடந்த ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.156 கோடி. இது கடந்த 2020 ஆகஸ்ட் மாதத்தில் ரூ.137 கோடியாக இருந்தது. தற்போது 14 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: