ஆரோக்கியம்

புற்றுநோய், ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் திராட்சை?

மத்திய ஆசியப் பகுதிகளைத் தாயகமாகக் கொண்ட திராட்சை அனைத்து வயது பிரிவினருக்கும் ஏற்ற சிறந்த உணவுப்பொருளாக திகழ்கிறது. இந்தியாவில், கி.பி 1300-ல் பாரசீகர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட திராட்சை மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களில் பசுமையான பண்ணைகளில் பயிரிடப்படுகிறது. 10,000-க்கும் மேற்பட்ட திராட்சை வகைகள் இருந்தாலும், திராட்சை முக்கியமாக டேபிள் கிரேப்ஸ் மற்றும் ஒயின் கிரேப்ஸ் என்ற இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகிறது. இவை இரண்டும் தனித்துவமான அமைப்பு, இனிப்பு மற்றும் சுவை கொண்டவை ஆகும். டேபிள் கிரேப்ஸ் விதை இல்லாதது. அதை அப்படியே சாப்பிடலாம். அவை சாலட்டுகள் மற்றும் சமையலிலும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த திராட்சை பச்சை, கருப்பு, சிகப்பு மற்றும் ஊதா போன்ற பல்வேறு வண்ணங்களில் வருகிறது. ஒயின் கிரேப்ஸ்-ல் இருந்து ஒயின் தயாரிக்கப்படுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திராட்சை சாறிலிருந்து ஒயின் தயாரிக்கும் பழக்கம் மேலை நாடுகளில் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சிகப்பு திராட்சை, பச்சை திராட்சையை காட்டிலும் குறைந்த கலோரிகளை கொண்டுள்ளன. சிகப்பு திராட்சையில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி 6, பொட்டாசியம், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், ஃபோலேட், மெக்னீசியம் மற்றும் செலினியம் போன்றவை உள்ளன. ஃப்ளவனாய்டுகள் திராட்சைகளில் காணப்படும் மிக சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். அது கண்களின் ஆரோக்கியத்துக்கு நன்மை செய்ய கூடியவை. அதையடுத்து, சிகப்பு திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

பாக்டீரியா எதிர்ப்பு

சிகப்பு திராட்சை பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் தடுப்பு பண்புகளை கொண்டுள்ளது. அதனால் அது பல தொற்று நோய்களிலிருந்து உங்களை பாதுகாக்க செய்யும்.

போலியோ வைரஸ் மற்றும் ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸுக்கு எதிராக போராட ஆண்டி வைரல் பண்புகள் பயனளிக்கும்.

சிறுநீரக கோளாறுகள்

யூரிக் அமிலத்தை குறைக்க சிகப்பு திராட்சை பயனுள்ளதாக இருக்கிறது. யூரிக் அமிலம் அதிகரிக்கும் போது அது முதலில் சிறுநீரகத்தில் தான் பாதிப்பை உண்டாக்கும்.

சிறுநீரக கல், சிறுநீரக பற்றாக்குறை. சிறுநீர் வடிகட்டுதலில் குறைபாடு போன்றவை உண்டாகும். இது மூட்டுகளில் தங்கி மூட்டு வலிகளையும் உண்டாக்கும்.

இந்த யூரிக் அமிலத்தை அகற்றவும், சிறுநீரகங்களின் வேலைப்பளுவை குறைக்கவும் சிகப்பு திராட்சை உதவுகிறது.

அல்சைமர்

அல்சைமர் என்பது ஒரு வகையான மூளைக்கோளாறு. இது வயதான காலத்தில் உண்டாக கூடியது. இதை ஆரம்ப கட்டத்தில் கவனிக்காமல் விட்டால் நினைவாற்றல் வேகமாக மங்க தொடங்கும்.

அல்சைமர் நோய்க்கு சிகிச்சையளிக்கவும், நரம்பு சேதத்தை எதிர்த்து போராட சிகப்பு திராட்சை பயனுள்ளதாக இருக்கிறது. கண் பார்வையையும் மேம்படுத்துகிறது.

இதையும் படிங்க:  ஆரோக்கியத்திற்கு ஏற்ற எட்டு உணவுகள்!

சிகப்பு திராட்சை சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றம் ஆகும். ரெஸ்வெராட்ரோலின் வளமான ஆதாரங்களை கொண்டிருப்பதால், அது திசுக்களை சிதைக்கும் சில குறிப்பிட்ட நொதிகளை தடுக்கும் முகவராக செயல்படுகிறது.

கண் கோளாறு, கண்களில் புரைவிழுவது போன்ற பிரச்சனைகளை தடுக்க சிகப்பு திராட்சையில் உள்ள ஃப்ளவனாய்டுகளில் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இது கண் புரை தடுத்து ஃப்ரீ ரேடிக்கல்களை குறைத்து போராடக்கூடும்.

​இதய ஆரோக்கியம்

சிகப்பு திராட்சையில் உள்ள ஃப்ளவனாய்டுகள் மற்றும் ரெஸ்வெரடோல் போன்றவை இதய நோய் தடுப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றவை.சிவப்பு திராட்சையிலிருந்து தயாரிக்கப்படும் ஒயின் ஆனது ஆஸ்பாலிபினால்கள், ஃப்ளவனாய்டுகள் மற்றும் ரெஸ்வெராட்ரோல் போன்ற ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் உள்ளன.

அதிக கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம், இரத்த உறைவு மற்றும் இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தை குறைக்கின்றன.

​ஒவ்வாமைகளுக்கு

சிகப்பு திராட்சையில் குவெர்செட்டின் எனப்படும் ஃப்ளவனாய்டு உள்ளது. இது ஒரு ஆக்ஸிஜனேற்ற விளைவுடன் ஒரு ஆண்டி ஹிஸ்டமை விளைவை அளிக்கிறது. பல ஒவ்வாமைகளுக்கு சிகிச்சையளிக்க பயனுள்ளதாக இருக்கிறது.

மூளைக்கு

மூளைக்கு இரத்த ஓட்டம் சீராக இருந்தால் முளையின் வேலை சுறுசுறுப்பாக இருக்கும். சிகப்பு திராட்சையில் உள்ள ரெஸ்வெராட்ரோல் மூளைக்கு 200% இரத்த ஓட்டத்தை அளிப்பதால், மூளை வேகமாக வேலை செய்யும் திறனை பெறுகிறது.

​புற்றுநோய்

சிகப்பு திராட்சையில் இருக்கும் ரெஸ்வெராட்ரோல் புற்றுநோயை கட்டுப்படுத்துவதில் நேர்மறையான விளைவை கொண்டுள்ளது.

சருமத்துக்கு தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களிலிருந்து பாதுகாக்கிறது. இதனால் அபாயகரமான சரும புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது.

சிகப்பு திராட்சை பழங்கள் புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும் போது உடலை கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கிறது.

ஆஸ்துமா

ஆஸ்துமாவை குணப்படுத்துவதில் சிகப்பு திராட்சை சிறந்த வல்லமை கொண்டுள்ளது. நுரையீரலில் ஈரப்பதத்தை அதிகரிக்க செய்கிறது.

ஆஸ்துமாவை ஏற்படுத்தும் நுரையீரல் அழற்சியை குறைக்க செய்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

சிகப்பு திராட்சை தோலில் அதிக அளவு ஃபைபர் மற்றும் ரெஸ்வெராட்ரோல் நுரையீரலில் வீக்கத்தை குறைக்கிறது. மேலும் காற்றுப்பாதைகளில் இருந்து சளி மற்றும் கபத்தை நீக்குகிறது.

எடை இழப்பு

சிகப்பு திராட்சை வெளிப்புற தோலில் காணப்படும் சபோனின்களை கொண்டுள்ளது. இது கொழுப்பை குறைக்க செய்கிறது மற்றும் இரத்தத்தில் கொழுப்பு உறிஞ்சுவதை தடுக்கிறது. இது உடல் பருமன் மற்றும் இதய நோய்களை தடுக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: