வேலைவாய்ப்பு

அடிதூள்..! JIPMER பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

புதுச்சேரியில் செயல்படும் JIPMER மருத்துவ பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய பணியிட அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. JIPMER பல்கலைக்கழகத்தில் Lab Technician பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நிறுவனம் – JIPMER
பணியின் பெயர் – Lab Technician
பணியிடங்கள் – 01
கடைசி தேதி – 31.08.2021
விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பங்கள்

காலியிடங்கள் :

ஜிப்மர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் Lab Technician பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

  • 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் Medical Laboratory Technician பாடங்களில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது
  • DMLT தேர்ச்சியுடன் பணியில் ஒரு வருடம் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் அல்லது
  • Blood Banking/ Life Sciences/ Microbiology/ Biochemistry/ Biotechnology பாடங்களில் B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.18,000/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Walk-in Interview/ Written Test மூலமாக தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணல் சோதனை ஆனது வரும் 03.09.2021 அன்று நடைபெறவுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதி படைத்தோர் வரும் 31.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

முகவரி – Dr.B.Abishekh, Associate Professor, Room NO: 2359, 3rd Floor, Department of Transfusion Medicine, JIPMER Blood Centre, JIPMER, Puducherry-605006

Official PDF Notification –  https://jipmer.edu.in/sites/default/files/Website%20Adverdisment%20for%20lab%20technician_0.pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: