இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று நாட்களில் 2,000க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
கொரோனாவில் இருந்து மீண்டு வருபவர்களை விட அதிகமான புதிய பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில், 4.48 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 2,451 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டன.
டெல்லியில் 965 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்… ஹரியானா மற்றும் கேரளாவில் 300க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில், நாடு முழுவதும் 54 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். 1,589 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
தற்போது, நாட்டில் சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 14,241 ஆக உள்ளது. நாட்டில் தினசரி மீட்பு விகிதம் 98.75 சதவீதமாக குறைந்துள்ளது. இதுவரை 187 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி டோஸ்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் 18 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh