உலகம்

நைஜீரியாவில் ஆறு மாநிலங்களுக்கு கோவிட்-19 ரெட் அலர்ட்..!

நைஜீரியாவில் கோவிட்-19 தொற்று மிக மோசமான அளவில் அதிகரிப்பதால் ஆறு மாநிலங்களுக்கு (ரெட் அலர்ட்) சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்னும் சில நாட்களில் இஸ்லாமிய பண்டிகை வரவிருப்பதால் பள்ளிவாசல்களுக்கு செல்லாது வீடுகளில் பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறும், ஒன்று கூடுவதை தவிர்க்குமாறும் அந்த நாட்டு அரசாங்கம் மக்களை கோரியுள்ளது.

கோவிட்-19 தொற்று பரவல் காரணமாக லாகோஸ், ஒயோ, ரிவர்ஸ், கடுனா, கனோ, ப்ளேட்டு மற்றும் தலைநகரை அண்மித்த எல்லைகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆபிரிக்காவில் அதிக மக்கள் தொகையை கொண்ட நாடான நைஜீரியாவில் டெல்டா தொற்று தீவிரமடைந்து 3ம் அலை உருவாகியுள்ளது.

நாட்டில் கடந்த வாரத்தில் கோவிட்-19 பாதிப்புக்குள்ளான நோயாளிகளின் எண்ணிக்கை 1,69,329 ஆக அதிகரித்துள்ளதுடன் 2,126 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில் மேலும் 8 மில்லியன் தடுப்பூசிகளை ஆகஸ்ட் மாதமளவில் பெற்றுக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: