இந்தியா

கோவிஷீல்டு தடுப்பூசி.. அரசு விலை 200.. தனியார் விலை 1000..

புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம், தனது கோவிஷீல்டு தடுப்பூசி வினியோகத்தை நேற்று தொடங்கியது. மாநில தலைநகரங்களில் கொண்டு செல்லப்பட்ட தடுப்பூசி டோஸ்கள் அங்கிருந்து பிரித்து கொடுக்கப்படுகின்றன.

இது தொடர்பாக இந்திய சீரம் நிறுவனத்தின் தலைவர் ஆதர் பூனவாலா, புனேயில் நிருபர்களிடம் கூறியதாவது.. தடுப்பூசியை சாதாரண மனிதர்களுக்கு, பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு கொண்டு போய்ச்சேர்ப்பதில்தான் உண்மையான சவால் அடங்கி இருக்கிறது.

எங்கள் தடுப்பூசியை மத்திய அரசுக்கு ரூ.200 என்ற சிறப்பு விலையில் வழங்குகிறோம். இது உலகின் மிக மலிவான விலைகளில் ஒன்றாகும். பிரதமரின் செயல்திட்டத்துக்கு ஆதரவு அளிப்பதற்காகவும், இந்த நாட்டின் சாமானிய மக்களுக்கு ஆதரவு அளிப்பதற்காகவும்தான் நாங்கள் மத்திய அரசுக்கு சிறப்பு விலையில் எங்கள் தடுப்பூசியை வழங்குகிறோம். அதே சமயம் எங்கள் தடுப்பூசியை தனியார் சந்தையில் ரூ.1000 என்ற விலைக்கு கிடைக்கச்செய்வோம் என்றார்.

Back to top button
error: Content is protected !!