தமிழ்நாடு

அரசின் ‘மானிய விலை இரு சக்கர வாகனம்’ திட்டம் – பாஜக வலியுறுத்தல்!!!

தமிழகத்தில் பெண்கள் இரு சக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஆட்சியில் பெண்கள் இரு சக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதனால் ஏழை, எளியோர் மிகவும் பயனடைந்தனர். வாகன தொகையில் 50% அல்லது 25,000 ரூபாய் இவற்றில் எது குறைந்த தொகையோஅது மானியமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு பெண்கள் வரவேற்பு அளித்தனர். வேலைக்கு செல்லும் பெண்கள் இத்திட்டத்தின் மூலம் இரு சக்கர வாகனம் வாங்க ஆர்வம் காட்டினர்.

தொலை தூரங்களில் வசிப்பவர்கள், மலைப் பிரதேசங்களில் வசிப்பவர்கள், திருநங்கைகள், குடும்பத் தலைவிகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் போன்றோர்க்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்கும் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் பெரியகருப்பன் தமிழகத்தில் மகளிருக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் என்ற அறிவிப்பு வெளியானதை அடுத்து இரு சக்கர வாகனம் வாங்க மானிய திட்டத்திற்கு வரவேற்பு இல்லை என்று கூறினார்.

இரு சக்கர வாகனங்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்தை மாநில அரசு நிறுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து இந்த அறிவிப்பு உழைக்கும் மகளிருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். பெண்கள் முன்னேற்றம் என்பது அவர்கள் சுயமாக முடிவெடுப்பது, யாரையும் சாராமல் இருப்பது, தங்கள் பணியை மேற்கொள்ள தாங்கள் சொந்தமாக வாகனங்களை இயக்குவது. மேலும் பெண்களுக்கு இரு சக்கர வாகனம் அவர்களுக்கு இறக்கைகளாக மாறி உள்ளது. எனவே இந்த திட்டத்தை தமிழக அரசு மீண்டும் தொடர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்!
Back to top button
error: