தமிழ்நாடு

அரசின் உதவித்தொகை, வங்கிக் கடன் – சென்னை மாநகராட்சியின் புதிய இணையதளம் தொடக்கம்!!!

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கி வருகிறது. அதனை தொடர்ந்து அரசின் உதவித்தொகை, வங்கிக் கடன் முதலியவற்றிற்கு சென்னை மாநகராட்சியின் புதிய இணையதளம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் நலத்திட்டங்களை தொடர்ந்து உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்பெறும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. அலுவலகங்கள் சென்று தெரிந்து கொள்ள வேண்டிய சில திட்டங்கள், சலுகைகள் முதலியவற்றை இந்த இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

இந்த இணையதளத்தின் மூலம் கல்வி உதவித்தொகை, சுயதொழில் வங்கி கடன் உதவி, உதவி உபகரணங்கள், திருமண உதவித்தொகை, பராமரிப்பு உதவித்தொகை, பாதுகாவலர் சான்று, இலவச பேருந்து பயண சலுகை, மாற்றுத்திறனாளிகள் நல வாரியம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கும் வகையில் சில திட்டங்கள் நேரடியாக இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சட்டங்கள், சட்டவிதிகள், கல்வி வேலைவாய்ப்பு, அவர்களுக்கு தடையற்ற சூழ்நிலை ஏற்படுத்துதல், அரசுப் பணியாளர் நலனுக்கான அரசாணை வழிகாட்டுதல்கள் முதலியவற்றையும் இந்த இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் சென்னை மாவட்டத்தில் இயங்கி வரும் சிறப்பு பள்ளிகள், இல்லங்கள், சிறப்பு கல்வி நிறுவனங்களின் விவரங்கள் இந்த இணையத்தில் கிடைக்கும். இத்தனை நன்மைகளை கொண்டுள்ள இணையதளமானது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ளது. இதில் சிறப்பம்சமாக பார்வையற்றவர்கள் பேசும் கணினி மற்றும் செல்பேசியின் மூலம் அறியும் வகையில் இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இணையத்தை ஆங்கிலத்தில் https://chennai.nic.in/-Departments என்கிற முகவரி மூலமும், தமிழில் https://chennai.nic.in/ta/ என்கிற முகவரி மூலமும் பெற்றுக்கொள்ளலாம்.

இதையும் படிங்க:  1 முதல் 12ம் வகுப்பு வரை 50% பாடத்திட்டம் குறைப்பு – பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: