தமிழ்நாடு

அரசு வழங்கும் உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!!!

படித்து முடித்து வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கி வருகிறது தமிழக அரசு. இதற்கு விண்ணப்பிப்பது தொடர்பான அறிவிப்பு குறித்த முழு விபரங்களை இப்பதிவில் காணலாம்.

தமிழக அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இதை தொடர்ந்து படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகையை பெறுவதற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். அதுமட்டுமல்லாது அதனை தொடர்ந்து புதுப்பித்திருப்பதும் அவசியமாகும். வயது வரம்பு மற்றும் குடும்ப ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மேலும் இந்த உதவித்தொகையானது பொறியியல், மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழில் முறை பட்டதாரிகளுக்கு வழங்கப்படாது என குறிப்பிடப்படுகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை ரூ.600, பிளஸ்-2 தோ்ச்சி எனில் ரூ.750, பட்டதாரிகளுக்கு ரூ.1000 என 10 ஆண்டுகளுக்கு உதவித்தொகை கிடைக்கும்.

முறையாக 9ம் வகுப்பு முடித்து 10 ம் வகுப்பில் தோல்வி அடைந்த இளைஞர்களுக்கு மாதம் ரூ.200 மற்றும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 300 ரூபாய் , மேல்நிலை கல்வியை முடித்தவர்களுக்கு 400 ரூபாய் மற்றும் பட்டதாரிகளுக்கு 600 ரூபாய் வழங்கப்படுகிறது. இவ்வாறு வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு 3 ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படும். தொலைதூர கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த உதவித்தொகை பெறுவதற்கு விருப்பமுள்ளவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகம் அல்லது ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் கையொப்பம் பெற்று உரிய ஆவணங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டம் – ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெற திட்டம்!!
Back to top button
error: