தமிழ்நாடு

3 வகை மாவட்டங்களை ஒன்றாக்கி தளர்வுகள் அறிவிப்பு? அரசு திட்டம்!!

 

தமிழக மாவட்டங்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஜூலை 5ம் தேதிக்கு பின் 3 வகை மாவட்டங்களையும் ஒன்றாக்கி தளர்வுகள் அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஜூன் 14ம் தேதி முதல் கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வரும் காரணத்தால் தமிழக மாவட்டங்கள் 3 வகைகளாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி வகை 1ல் பாதிப்பு அதிகமாக காணப்படும் கோவை, ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த 11 மாவட்டங்களில் குறைந்த அளவிலான தளர்வுகள் அளிக்கப்பட்டு பாதிப்பு குறைவாக காணப்படும் வகை 2 மற்றும் 3 ல் உள்ள 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் ஜூலை 5ம் தேதி காலை 6 மணி முதல் முடிவுக்கு வரவுள்ளது. இதன் காரணமாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மருத்துவ குழு மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஆலோசனை கூட்டத்திற்கு பின் ஊரடங்கு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் ஜூலை 5ம் தேதிக்கு பின் 3 வகைகளாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் அனைத்தும் ஒன்றாக்கி தளர்வுகள் அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது. கொரோனா பரவல் குறைந்து வருவதால் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள் தர தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அரசு வட்டாரங்களில் கூறப்பட்டு வருகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: