உலகம் முழுவதும் நாளை மறுநாள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாட இஸ்லாமியர்கள் அனைவரும் தயாராக இருந்து வருகின்றனர். இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் கார்க்கோன் பகுதியில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அந்தப் பகுதியில் ஏதேனும் கலவரம் நடந்து விடாமல் தடுப்பதற்காக மே 2 மற்றும் மே 3 என இரண்டு நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கார்க்கோன் பகுதியில் ஏப்ரல் 10-ஆம் தேதி ராம நவமியை முன்னிட்டு ராம பக்தர்கள் ஊர்வலம் சென்றனர். அப்போது அந்த பக்தர்கள் மீது சில மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கல் செய்தனர்.
இதனால் இருதரப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டு பல கலவரங்கள் நடைபெற்றது. அதேபோல தற்போது ரம்ஜான் பண்டிகை அன்றும் நடந்து விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது மே 2 மற்றும் மே 3 ஆகிய இரண்டு நாட்களும் மக்கள் ரம்ஜான் தொழுகையை வீட்டிலிருந்தே செய்து கொள்ளுங்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஊரடங்கின் போது அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு தான் இருக்கும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஏதேனும் தேர்வு அறிவிக்கப்பட்டிருந்தால் அந்த மாணவர்களுக்கு மட்டும் வெளியே செல்ல அனுமதி வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். மேலும் ஊரடங்கின் போது அக்ஷய திருதியை மற்றும் பரசுராம் ஜெயந்தி போன்ற முக்கிய நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ரம்ஜான் பண்டிகைக்கு மட்டுமல்லாமல் அம்பேத்கர் பிறந்தநாள், மஹாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி மற்றும் அனுமன் ஜெயந்தி போன்ற முக்கிய விழாக்களின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh