தமிழ்நாடுமாவட்டம்

நிலமற்ற ஏழைகளுக்கு இரண்டு மாதங்களுக்குள் நிலம் வழங்கும் திட்டம் – தமிழக அரசு அரசாணை வெளியீடு!

நிலமற்ற ஏழைகளை கண்டு அவர்களுக்கு இரண்டு மாதங்களுக்குள் நிலம் வழங்குமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டது.

இதன் அடிப்படையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயலாளர் கோபால், நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வருவாய்த்துறை செயலாளர் தலைமையில் ஒரு குழுவை அமைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், இந்த குழுவின் துணைத் தலைவராக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயலாளரும்,  உறுப்பினராக நில நிர்வாக ஆணையரும், உறுப்பினர் மற்றும் ஒருங்கிணைப்பாளராக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குநர் இருப்பார் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  நீலகிரி மாவட்ட ஆட்சியராக எஸ்.பி.அம்ரித் பதவியேற்றார்!
Back to top button
error: