தமிழ்நாடுமாவட்டம்

அரியர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும்.. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்..!

கொரோனா காரணமாக ரத்தான அரியர் தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், அரியர் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர்கள் குமார் ஆதித்தன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்‍கு இன்று விசாரணைக்‍கு வந்தபோது, தமிழகத்தில் அரியர் தேர்வுகள், அடுத்த மாதம் முதல் ஆன்லைன் மூலமாக நடத்த வாய்ப்புள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஆன்-லைன் மூலமாகவோ அல்லது ஆப்- லைன் மூகமாகவோ அனைத்து மாணவர்களும் தேர்வு எழுத வேண்டும் என உத்தரவிட்டனர். தேர்வு நடத்தும் தேதி குறித்து பல்கலைகழக மானிய குழுவின் ஆலோசனை பெற்று முடிவு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஏற்கனவே தேர்வு எழுதிய மாணவர்களுக்கு சான்றிதழ்களை விரைந்து வழங்கவும், தேர்வு நடைமுறைகளை 8 வாரத்திற்குள் முடிக்கவும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: