வேலைவாய்ப்பு

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு 2021 – எழுத, படிக்க தெரிந்தால் போதும்!

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் (TNHRCE) இருந்து சென்னையில் உள்ள அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. Typist, Archakar, Watchman, Oduvar , Animal Caretaker உட்பட பல்வேறு பதவிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

நிறுவனம் – TNHRCE
பணியின் பெயர் – Typist, Archakar, Watchman, Oduvar , Animal Caretaker, Menom Set, Thiruvalagu
பணியிடங்கள் – 09
கடைசி தேதி – 20.09.2021
விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பங்கள்

வேலைவாய்ப்பு :

Typist, Archakar, Watchman, Oduvar , Animal Caretaker, Menom Set, Thiruvalagu ஆகிய பணிகளுக்கு மொத்தமாக 09 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

வயது வரம்பு :

01.07.2021 தேதி கணக்கீட்டின்படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

கல்வித்தகுதி :

  • Typist – 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Typing Certificate பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • Archakar (Priest) – நன்றாக தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். வேத பாடசாலையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  • Parisarakar – 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பூஜை பற்றிய அறிவு இருக்க வேண்டும்.
  • Menom Set – தமிழ் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். இசைப் பள்ளியில் தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  • Watchman, Night Watchman, Thiruvalagu, Animal Caretaker – நன்றாக தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
  • Oduvar – நன்றாக தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஆகம அறிவு மற்றும் ஆகம சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.15,300/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview செயல்முறையின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதி படைத்தோர் வரும் 20.09.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

 

இதையும் படிங்க:  அடிதூள்..! JIPMER பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: