தமிழ்நாடுமாவட்டம்

சுற்றுலாத் தலங்களுக்கு பொதுமக்கள் செல்லத் தடை.. தமிழக அரசு அறிவிப்பு..!

நீலகிரி, கொடைக்‍கானல் உட்பட சுற்றுலாத் தலங்களுக்‍கு செல்ல அனைத்து நாட்களிலும் தடை விதிக்‍கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

நீலகிரி, கொடைக்‍கானல், ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்‍கு செல்ல அனைத்து நாட்களுக்‍கும் தடை விதிக்‍கப்படுவதாகவும், தமிழகத்தில் உள்ள அனைத்து கடற்கரைப் பகுதிகளிலும் அனைத்து நாட்களிலும் பொதுமக்‍கள் செல்லத் தடை விதிக்‍கப்படுவதாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

ஏற்கனவே குடமுழுக்‍கு, திருவிழா நடத்த அனுமதி பெற்றிருக்‍கும் கோயில்களில் 50 நபர்களுக்‍கு மிகாமல் விழாக்‍கள் நடத்த அனுமதி அளிக்‍கப்படுவதாகவும், கோயில்களில் ஏற்கனவே திட்டமிடப்படாத குடமுழுக்‍குகள் மற்றும் திருவிழாக்‍களை ஒத்திவைக்‍கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்கட்டமைப்பு, மருத்துவ வசதிகளுடைய தனியார் மருத்துவமனைகளுடன், விருப்பப்படும் விடுதிகள், கொரோனா மையங்களாக செயல்படலாம் – திருமண மண்டபங்கள், திரையரங்குகள், உணவகங்களில் வழிகாட்டு நடைமுறையை பின்பற்றாவிடில் உரிமையாளர்கள் மீது நடவடிக்‍கை எடுக்‍கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:  புகைப் பிடிப்பதால் முகத்தில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் தெரியுமா? கண்டிப்பா தெரிஞ்சுகோங்க..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: