இந்தியா

ஆண்களுக்கு வீட்டு வேலை பயிற்சி! சமத்துவத்தில் தீவிரம் காட்டும் கேரள அரசு!

எல்லா வீடுகளிலும் சமையல் செய்வது, பாத்திரம் கழுவுதல், துவைத்தல், பெருக்குதல் என வீட்டு வேலைகளை ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிகம் செய்வதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், இந்த பணிகளை ஆண்களும் மேற்கொள்ளும் வகையில் பயிற்சி கொடுக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் பாலின சமத்துவத்தை நிலைநாட்ட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறையால் தொடங்கப்பட்ட ஸ்மார்ட் கிச்சன் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதன் கீழ், மாநிலம் முழுவதும் உள்ள ஆண்களுக்கு வீட்டு வேலைகளைச் செய்வதற்கான நடைமுறைப் பயிற்சி அளிக்க கேரள அரசு முடிவெடுத்துள்ளது.

குறிப்பாக அனுபவம் வாய்ந்த சமையல் வல்லுநர்கள் இந்த திட்டத்தின் கீழ் ஆண்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதற்கு வட்டியில்லாக் கடன்களையும் அரசு வழங்குகிறது. இந்த கடன் கணவன், மனைவி பெயரில் வழங்கப்படும். அதேபோல், திட்டத்தை செயல்படுத்துவதை கண்காணிக்க குழு அமைக்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: