தமிழ்நாடு

அரசு வழங்கும் ரூ.3,500 உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!!!

ஈரோடு மாவட்டத்தில் வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி அறிவித்துள்ளார். இந்த உதவித்தொகை பெற விரும்புவர்கள் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ் உலகின் மூத்த மொழி செம்மொழி என்ற பெயர் பெற்றது. இத்தகைய தமிழ் மொழியை மென்மேலும் சிறப்படைய வைப்பது தமிழறிஞர்களே. இவர்கள் தமிழ் மீது கொண்ட பற்றினால் தமிழ் மொழியை வளர்ப்பதில் ஆர்வம் கொண்டு தொடர்ந்து தமிழ் பணி ஆற்றுகின்றனர். இந்த தமிழறிஞர்களுக்கு முதுமை காலத்தில் உதவும் வகையில் அரசு சார்பாக உதவி மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது.

மற்ற மாவட்டங்களை தொடர்ந்து தற்போது ஈரோடு மாவட்டத்தில் தமிழறிஞர்கள் உதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் வசிக்கும் தமிழறிஞர்கர்கள் www.tamilvalarchithurai.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது தமிழ் வளர்ச்சி துறையில் நேரில் பெற்று கொள்ளலாம். அந்த விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதனுடன் தமிழ் பணி ஆற்றியமைக்கான சான்றிதழ்களை இணைக்க வேண்டும்.

இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விரும்புவோரின் ஆண்டு வருமானம் 72 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 31 ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கபடும் தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை ரூ.3500 மற்றும் மருத்துவப் படி ரூ.500 அவரது வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:  சிறப்பான தரிசு சாகுபடிக்கு ரொக்கப் பரிசு – மகளிருக்கு ரூ.1 கோடி மானியம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: