தமிழ்நாடு

அரசு வேலைவாய்ப்பு புதுப்பிப்பு – ஆகஸ்ட் 27 கடைசி நாள்!!

2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு பல்வேறு காரணங்களால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் மீதும் புதுப்பித்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 27-ஆம் தேதிக்குள் அதிகாரபூர்வ இணையதளம் வழியாக புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

மாணவர்கள் 10ம் வகுப்பு முடித்ததும் தங்களது கல்வி குறித்த விவரங்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது அவசியம். 10ம் வகுப்பு 12ம் வகுப்பு மற்றும் கல்லூரி படிப்பு முதலியனவற்றை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து வைத்திருப்பது கட்டாயமான ஒன்று. மேலும் இதனை அடிக்கடி புதுப்பித்து இருக்க வேண்டும். அதுபோன்று புதுப்பிக்க தவறியவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு அமைந்துள்ளது இதனை பயன்படுத்தி புதுப்பித்துக் கொள்ளலாம்.

இது குறித்து தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குநர் செ. ரமேஷ் குமார் கூறியதாவது கடந்த 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவைப் பல்வேறு காரணங்களால் புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள் பணி வாய்ப்பை பெறும் வகையில் மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக சிறப்பு புதுப்பித்தல் சலுகை தொடர்பாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையானது மே 28ம் தேதி வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் அரசாணை வெளியிடப்பட்டு மூன்று மாதங்களுக்குள் அதாவது ஆக. 27-ஆம் தேதிக்குள் அதிகாரபூர்வ இணையதளம் வழியாக புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என சலுகைகள் வழங்கப்பட்டது. இணையதளம் மூலம் புதுப்பிக்க இயலாத வர்கள் பதிவஞ்சல் மூலம் விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்துக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: