தொழில்நுட்பம்இந்தியாதமிழ்நாடு

தங்கத்தை இப்படி வாங்கினால் நல்ல லாபம்..!

தங்க முதலீட்டுப் பத்திரங்களை வாங்குவதற்கான அடுத்த கட்ட அறிவிப்பை மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த முறை கிராமுக்கு 4,912 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தங்க முதலீட்டுப் பத்திரத்தை எப்படி வாங்கிப் பயன்பெறுவது என்று இங்கே பார்க்கலாம்.

தங்க முதலீட்டுப் பத்திரம்

0.30689500 1446709155 pm launches gold schemes 6

Sovereign gold bond scheme எனப்படும் மத்திய அரசின் தங்க முதலீட்டுப் பத்திரத் திட்டத்தின் கீழ் தங்கப் பத்திரங்கள் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுகின்றன. இத்திட்டத்தில், தங்கத்திற்கான விலை முன்னதாகவே நிர்ணயிக்கப்படும். கூடுதலாக செய்கூலி, சேதாரம் என எதுவும் கிடையாது. எனவே இப்பத்திரங்களில் நம்பிக்கையுடன் முதலீடு செய்யலாம். தங்கப் பத்திரத் திட்டத்தில் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 2.5 சதவீத வட்டி கிடைக்கும். நாம் முதலீடு செய்திருக்கும் தங்கத்திற்கு வட்டி வாயிலாக அதிக வருமானம் ஈட்டிக்கொள்ளலாம்.

gold bond 2

விலை உயர்வால் லாபம்

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் விலை உயர உயர வட்டி வாயிலாக அதிக லாபமும் உங்களுக்குக் கிடைக்கும். தங்க முதலீட்டுப் பத்திரங்களை வாங்கி எட்டு ஆண்டுகள் வரை வைத்திருக்கலாம். எட்டு ஆண்டுகள் முடிந்த பின்னர் கிடைக்கும் வருமானத்திற்கு வரி செலுத்தத் தேவையில்லை. எட்டு ஆண்டுகள் வரை காத்திருக்க முடியாது என்றாலும், அவசரத் தேவை ஏற்பட்டால் ஐந்து ஆண்டுகளுக்குப் பின் பத்திரத்தை விற்று பணத்தை வாங்கிக்கொள்ளலாம். ஆனால் அச்சமயத்தில் வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டியிருக்கும்.

f3eaa5e4 d552 11ea a8fc c49ed8b20100

விலை எவ்வளவு?

தங்க முதலீட்டுப் பத்திரங்களுக்கான விற்பனை அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, பிப்ரவரி 1 முதல் 5 வரை நீங்கள் பத்திரங்களை வாங்க முடியும். ஆன்லைன் மூலமாகவும் பத்திரங்களை வாங்கலாம். ஆன்லைன் மூலமாக வாங்கினால் கிராமுக்கு 50 ரூபாய் சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கப் பத்திரத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 4,912 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய வெளியீட்டில் பத்திரத்தின் விலை ரூ.5,104 ஆக இருந்தது.

Back to top button
error: Content is protected !!