தமிழ்நாடு

மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை – கவலையில் மக்கள்

கடந்த சில நாட்காளாக குறைந்து வந்த தங்க விலை இன்று மீண்டும் அதிரடியாக அதிகரித்துள்ளது. இதனால் சில நாட்களாக நிம்மதி அடைந்திருந்த மக்கள் தற்போது கவலை அடைந்துள்ளனர்.

தொடர் ஏற்றம்:

கொரோனா நோய் பரவலா காரணமாக பல விதமான சிக்கல்கள் மற்றும் சரிவுகளை நம் அனைவரும் தொடர்ச்சியாக சந்தித்து வருகின்றோம். அந்த வகையில் பலரும் வேலையினை இழந்ததால் நாட்டின் பொருளாதாரம் மிகுந்த சரிவினை சந்தித்தது. இதனால் தங்களது எதிர்கால தொழில் நலன் கருதி தொழில் முனைவோர்கள் பாதுகாப்பான முதலீடான தங்கத்தில் முதலீடு செய்தனர்.

2bfb3863f95e79af28350aaed0a5e667 1

இதனால் பொது முடக்க காலத்தில்; கூட தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிரடியாக உயர்ந்து வந்தது. ஆனால், கடந்த வாரத்தில் இருந்து தங்க விலை சற்று சரிந்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. உச்சகட்டமாக தங்க விலை கடந்த 4 நாட்களாக தொடர்ச்சியாக அதிரடியாக குறைந்து வந்தது. இப்படியான நிலையில் இன்று மீண்டும் தங்க விலை உயர்ந்து மக்களை கவலை அடையவைத்துள்ளது.

இன்றைய விலை நிலவரம்:

இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ரூ.38,080 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கிராம் ரூ.20 உயர்ந்து ரூ.4,760 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூய தங்கமும் (24 கேரட்) ஒரு பவுன் 160 ரூபாய் உயர்ந்து ரூ. 41,120 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

10 gorgeous temple jewellery designs for 2019 brides 1

ஒரு கிராம் ரூ.5,140 ஆக உயர்ந்துள்ளது. இது இப்படி இருக்க வெள்ளி நேற்றைய விலையினை விட இன்று 66.70 ஆக குறைந்துள்ளது. ஒரு கிலோ 66,700 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மற்ற இடங்களில் தங்கம் விலை:

இந்தியாவில் உள்ள பிற பகுதிகளில் சில மாறுதல்களுடன் தங்க விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் தங்கம் விலை (கிராம் கணக்கில்),

மும்பை – 4,985 ரூபாய்
பெங்களூர் – 4,699 ரூபாய்
ஹைதராபாத் – 4,691 ரூபாய்
ஓசூர் – 4,749 ரூபாய்
டெல்லி – 4,938 ரூபாய்
பாண்டிச்சேரி – 4,752 ரூபாய்
கேரளா – 4,708 ரூபாய்

loading...
Back to top button
error: Content is protected !!