தமிழ்நாடு

அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இன்றைய மாலை நிலவரம்..

கடத்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து வருகிறது. தற்போது சென்னையில் இன்றைய மாலை நிலவரப்படி ஆபரணதங்கத்தின் விலை மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது. இதனால் நகை வாங்குவதற்கு மக்கள் மகிழ்ச்சியோடு செல்கின்றனர்.

தங்கம்:

கடந்த கொரோனா காலத்தில் நாட்டின் பொருளாதாரமே வீழ்ச்சி அடைந்தது. மேலும் இதனால் தங்கத்தின் விலை யாரும் எதிர்பாராத வகையில் வரலாறு காணாத வகையில் உச்சத்தை தொட்டது. இதனால் நகை வாங்குவதற்காக திட்டம் தீட்டியவர்களின் கனவு சிதைந்து போனது. தற்போது நாட்டின் பொருளாதாரம் சற்று உயர்ந்து வருகிறது. மேலும் கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து வருகிறது. தற்போது அதேபோல் இன்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளது. இதனால் நகை வாங்க காத்திருந்த அனைவருக்கும் லாட்டரி அடித்துள்ளது என்றே சொல்லலாம்.

gold purchase

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்:

சென்னையில் இன்று மாலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.152 குறைந்துள்ளது. தற்போது 1 சவரன் ஆபரணத்தங்கம் ரூ. 36,936 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் 1 கிராம் ஆபரணத்தங்கம் தற்போது ரூ. 4,617 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் தற்போதைய நிலவரப்படி 1 கிராம் வெள்ளி ரூ.70.70 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் 1கிலோ கட்டி வெள்ளி தற்போது ரூ. 70,700 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Back to top button
error: Content is protected !!