இரண்டாவது நாளாக தங்கத்தின் விலை சரிவு – மகிழ்ச்சியில் மக்கள்!

சென்னையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கத்தின் விலை சரிந்து வருகிறது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 51 குறைந்து ஒரு கிராம் ரூ 4,754 க்கும் , சவரனுக்கு ரூ 408 குறைந்து ஒரு சவரன் ரூ 38,032 க்கும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.
விலை சரிவு
கடந்த மூன்று மாதங்களாக தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இதற்கு முன்னதாக ஒரு வாரத்தில் மட்டும் ரூ 1384 அளவுக்கு அதிகரித்தது. அதனால் தங்கம் ஒரு சவரன் ரூ 39,000 வரை விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போது தொடர்ச்சியாக இரண்டு நாளாக தங்கத்தின் விலை சரிந்து வருகிறது. இன்று மட்டும் ஒரு சவரனுக்கு ரூ 408 வீதம் குறைந்துள்ளது. நேற்றைய நிலவரத்தின் படி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 80 குறைந்து ஒரு கிராம் ரூ 4,805 க்கும், சவரனுக்கு ரூ 640 குறைந்து ஒரு சவரன் ரூ 38,440 க்கும் விற்பனையானது.
இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 51 குறைந்து ஒரு கிராம் ரூ 4,754 க்கும், சவரனுக்கு ரூ 408 குறைந்து ஒரு சவரன் ரூ 38,032 க்கும் விற்கப்படுகிறது. மேலும் கடந்த இரு நாட்களுக்குள்ளாக சவரனுக்கு ரூ 1,048 சரிந்துள்ளது.
தொடர்ச்சியாக தங்கத்தின் விலை குறைந்து வருவதை பற்றி சென்னையில் தங்கம் மற்றும் வைர வியாபாரிகளின் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறும்போது,”அமெரிக்காவில் புதிய அதிபர் பதவியேற்கும் வரையில் தங்கத்தின் விலை இப்படித்தான் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். எப்போது தங்கத்தின் விலை கூடும் அல்லது குறையும் என்று தெரியாது” என்று தெரிவித்துள்ளார்.