தமிழ்நாடு

6வது நாளாக அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை – நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்..!

சென்னையில் தொடர்ந்து 6வது நாளாக ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சரிவை சந்தித்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் தங்கத்தின் விலை குறைந்து வருவதால் நகை வியாபாரம் அதிகரித்து உள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

தங்கம் விலை நிலவரம்:

கொரோனா ஊரடங்கு காலத்தில் பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவின் காரணமாக தங்கத்தின் மீது முதலீடுகள் கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் அதன் விலையும் வரலாறு காணாத அளவு அதிகரிக்க தொடங்கியது. பின்னர் ஊரடங்கு தளர்வுகள் காரணமாக தங்கத்தின் விலை சிறிது சிறிதாக சரிவை சந்தித்தது. புத்தாண்டு தொடங்கியதில் இருந்தே தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

gold purchase

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 காரட்) ரூ.3 குறைந்து ரூ.4,677க்கும், ஒரு சவரன் 24 ரூபாய் சரிந்து ரூ.37,416க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 6 நாட்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு 1,664 ரூபாய் குறைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.70.70 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Back to top button
error: Content is protected !!