ரேஷன் கார்டு விதிமுறைகளில் அரசு பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ரேஷன் பொருட்களை சரியான எடையில் வழங்க எலெக்ட்ரானிக் எடை மெஷின்கள் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ரேஷன் கார்டுகள் மூலம் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் மளிகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை அரசு வழங்கி வருகிறது. கடந்த ஊரடங்கு மாதங்களில் அனைத்து மாநில அரசுகளும் ரேஷன் கடைகள் மூலம் நிவாரணங்களை பெற்று மக்கள் பயனடைந்தனர். இந்த குடும்ப அட்டை குடும்ப தலைவரின் வருமானத்தை பொறுத்து ரேஷன் அட்டைகளின் தரநிலை 5 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் வேலைக்காக இடம்பெயரும் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் இந்தியாவில் ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு திட்டம் கொண்டுவரப்பட்டது.
இதன் மூலம் புலம் பெயர் தொழிலாளர்கள் பயன் பெற்று வருகின்றனர். கடந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் இலவசமாக உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. தற்போது ரேஷன் கார்டு முறையில் மத்திய அரசு பல மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் அளவு குறைவாக உள்ளதாக ரேஷன் அட்டைதாரர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். ஏழை எளிய மக்கள் பணம் கொடுத்து பொருட்கள் வாங்கும் போது அதற்கேற்றவாறு அளவு இருப்பதில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.
அதாவது நிர்ணயிக்கப்பட்ட அளவை விடக் குறைவான அளவில் உணவு தானியங்கள் இருப்பதாக கூறுகின்றனர். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ரேஷன் கார்டில் புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. அனைத்து ரேஷன் கடைகளிலும் எலக்ட்ரானிக் எடை மிஷின்கள் வைக்கப்படும். இதன் மூலம் மட்டுமே உணவு தானியங்கள் வினியோகம் செய்யப்பட வேண்டும். இதன் மூலம் உணவுப் பொருட்களை விநியோகம் செய்யும் மோசடிகள் கட்டுப்படுத்தப்படும் என்று தெரிகிறது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh