தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக அரசு வாக்குறுதி அளித்தது இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் நகைக்கடன் தள்ளுபடி மேல்முறையீட்டு மனுக்களை வழங்கலாம் என்று கூட்டுறவு இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.
தமிழக கூட்டுறவு சங்கங்களில் பெற்ற 5 சவரனுக்கு உட்பட்ட தங்க நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது வாக்குறுதி அளித்தார். இந்த நிலையில் மு.க ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் நிபந்தனைகளின் அடிப்படையில் நகைக்கடன் தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான நிபந்தனைகளை வரையறை செய்யும் பணியில் கூட்டுறவு சங்க அதிகாரிகள் ஈடுபட்டனர். அதன்படி தற்போது நிபந்தனைகளின் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு அறிவித்தது.
இதில் மொத்த கடன் பெற்ற 48,84 ,726 பேரில் 35,37,693 பேர் நகைக்கடன் பெற தகுதியற்றோர் பட்டியலில் உள்ளனர். ஏராளமானோர் தகுதியற்றோர் பட்டியலில் இருந்ததால் கடன் பெற்றவர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில் அனைவரது கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்தது. இதையடுத்து தகுதியானோருக்கு 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடிக்கான அரசாணை வெளியிட்டபட்டு அதற்கான பணிகளும் தொடங்கியது.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை கட்டுப்பாட்டில் செயல்படும் நகைக்கடன் வழங்கும் கூட்டுறவு நிறுவனங்களில் தமிழக அரசின் ஆணையின்படி தள்ளுபடிக்கு தகுதியான பட்டியல் வலைதளத்தில் வெளியிடப்பட்ட 8.4.2022 முதல் 7.5.2022 வரை ஒரு மாத காலத்திற்குள் தள்ளுபடிக்கு தகுதி பெறாதோர் தங்களின் ஆட்சேபனை மனுக்கள் மற்றும் மேல்முறையீட்டு மனுக்களை கூட்டுறவு சங்கங்களுக்கு உட்பட்ட அருப்புக்கோட்டை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சரக துணைப்பதிவாளர் அலுவலகங்களில் அளிக்கலாம் என்று கூட்டுறவு இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh