பொழுதுபோக்கு

செரிமானப் பிரச்சினைகளைச் சரிசெய்யும் இஞ்சித் துவையல்!

செரிமானப் பிரச்சினைகளைச் சரிசெய்யும் வகையிலான இஞ்சித் துவையலை நாம் இப்போது செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

இஞ்சி – 3
கறிவேப்பிலை – தேவையான அளவு
புளி – நெல்லிக்காய் அளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கடுகு – 1/2 ஸ்பூன்
கடலைப் பருப்பு – 2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் – 3

செய்முறை

இஞ்சியைக் கழுவி தோல் நீக்கி நறுக்கிக் கொள்ளவும்.

அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி இஞ்சி, மிளகாய் வற்றல், புளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அடுத்து வதக்கிய பொருட்களை மிக்சியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.

அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டினால் இஞ்சி சட்னி ரெடி…!!


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  இரத்த சோகையை குணபடுத்துவதோடு.. ஞாபக சக்தியை அதிகரிக்க செய்ய சீத்தாப்பழத்தில்.. ருசியான ஜூஸ் செய்து அசத்தலாம்..!!
Back to top button
error: