ஆன்மீகம்

ஜென்ம பாவம் போக்கும் தாமரைத் தண்டு திரி தீபம்!

வீடு, அலுவலகம், கோயில் போன்ற இடங்களில் தெய்வங்களை வழிபடும்போது, தீபங்களை ஏற்றி வழிபாடு செய்து வந்தால் தடைகளும், பிரச்சனைகளும் விலகுவதை கண்கூடாக பலரும் பார்த்திருப்போம். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இவ்வாறு விளக்கேற்றி வழிபடும் கலாச்சாரத்தை நமது முன்னோர்கள் சுபநிகழ்ச்சிகளிலும், துக்க நிகழ்ச்சிகளிலும் ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு விளக்கேற்றுவதிலும் எந்த திசைகளில் ஏற்றுவது சிறந்தது என்றும், எந்த திரி கொண்டு ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும், எத்தனை முகம் கொண்ட தீபம் ஏற்ற வேண்டும் என்றெல்லாம் கூறியுள்ளனர். அதையடுத்து, தீபமேற்றி வழிபாடு செய்வது குறித்து பார்க்கலாம்.

திசைகள்

விளக்கேற்றுவதில் பல நியமங்கள் இருக்கின்ற போது, கிழக்கு முகமாக தீபமேற்றினால், துன்பங்கள் அனைத்தும் நீங்கும். வீட்டில் நிம்மதி அதிகரிக்கும்.

மேற்கு முகமாக தீபம் ஏற்றக்கூடாது. அப்படி ஏற்றினால், கிரக தோஷங்கள் உண்டாகும். உறவுகளிடையே சண்டையும் சச்சரவும் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதி இல்லாத நிலை ஏற்படும்.

வடக்கு முகமாக தீபமேற்றினால், இல்லத்தில் சுபகாரியங்கள் அனைத்தும் தடையின்றி நடைபெறும். வீட்டில் உள்ள குழந்தைகள், கல்வியில் சிறந்து விளங்குவார்கள். காரியத்தடைகள் என்பதே இல்லாத நிலை ஏற்படும். வீட்டில் செல்வத்துக்குக் குறைவிருக்காது.

தெற்கு முகமாக தீபமேற்றினால், மனதில் சஞ்சல எண்ணங்களும் குழப்பங்களும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

விளக்குகளின் வகைகள்

பஞ்சலோகம், வெள்ளி விளக்கு, குத்து விளக்கு, காமாட்சி விளக்கு, பாவை விளக்கு, சர விளக்கு, கோடி விளக்கு, தூண்டா மணி விளக்கு, அகல் விளக்கு என பல வகைகள் இருந்தாலும், அவரவர் வசதிகேற்ப மனத் தூய்மையுடன் சிறு மண் விளக்கிலாவது வீடுகளில் ஏற்றி வைத்து இறைவனை வழிபடுவது நல்லது.

எத்தனை முகம்

பொதுவாக விளக்குகளில் ஐந்து முகங்கள் இருக்கும். ஐந்து முக விளக்குகளை அனைத்து நேரங்களிலும் ஏற்றி வைப்பது நடைமுறைக்கு சாத்தியமாகாது. அதனால் ஒரு முகமோ, இரண்டு முகமோ தினமும் விளக்குகளை ஏற்ற வேண்டும்.

திரி

தூய பஞ்சினால் திரியை இட்டு விளக்கேற்றுவதால், குடும்ப ஒற்றுமை போன்ற நற்பலன்கள் கிடைக்கும்.

மஞ்சள் நிறம் கொண்ட திரியை ஏற்றினால் அம்பாளின் கருணை கிடைப்பதோடு, மன தைரியம் கூடும்.

சிவப்பு நிற திரி ஏற்றினால் தடைபட்ட திருமணம் சிறப்பாக நடைபெறும்.

வாழைத்தண்டு திரி ஏற்றினால் புத்திரப் பாக்கியத்தை அருளும்.

வெள்ளெருக்குப் பட்டையை திரியாக்கி விளக்கேற்றினால் செல்வங்கள் பெருகி வாழ்வு வளம் பெறும்.

வாழைத்தண்டு கொண்டு திரியேற்றி வழிபட்டு வணங்கினால், இதுவரை குலதெய்வ வழிபாடுகள் மேற்கொள்ளாத பாவங்கள் விலகி விடும். புத்திரப் பாக்கியம் கிடைக்கும்.

இதையும் படிங்க:  அம்மன் கோயில்களில் மாவிளக்கு ஏற்றுவது ஏன்?

தாமரைத் தண்டு

தாமரைத் தண்டு கொண்டு திரியேற்றுவது விசேஷமானது. இதன் நாரைத் திரித்து ஏற்றும்போது, தெய்வக் குற்றங்கள் நீங்கி, தீய சக்திகள் விலகி விடும். மேலும், இந்த ஜென்மத்துப் பாவங்கள் அனைத்தும் நீங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: