தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலை திடீரென உயர்வு – வாகன ஓட்டிகள் துயரம்..!

சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் துயரம் அடைந்து உள்ளனர். பெட்ரோல் லிட்டருக்கு ரூ 84.36 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ 76.17 என்ற விலையில் விற்கப்படுகிறது.

பெட்ரோல் மற்றும் டீசல்

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. பின்பு கொரோனா தாக்கம் அதிகரித்துக் கொண்டே வந்ததால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா காலத்தில் அதிகமாக வாகனங்களை பொதுமக்கள் பயன்படுத்தாத காரணத்தால் தேவை குறைந்து பெட்ரோல், டீசல் விலை சற்று சரிந்தது.

petrol 1 1

பின்பு ஜூன் மாதம் முதல் படிப்படியாக தளர்வுகளை தமிழக அரசு வெளியிட்டது. இதனால் வாகன ஓட்டிகள் இயல்பு நிலைக்கு திரும்பியதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியது எண்ணெய் நிறுவனங்கள்.

இன்றைய விலை

இன்று சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 17 காசுகள் அதிகரித்து ரூ.84.36, டீசல் லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து ரூ.76.17 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரம் பெட்ரோல் லிட்டர் ரூ 84.14 க்கும், டீசல் லிட்டர் ரூ. 75.95 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.

petrol diesel

இன்று மறுபடியும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி உள்ளது எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

loading...
Back to top button
error: Content is protected !!