தமிழ்நாடுமாவட்டம்

திருச்சி: டீக்கடையில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து!!

திருச்சி காந்தி மார்க்கெட்டில், டீ கடையில் கேஸ் சிலிண்டர் வெடித்ததால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. கடையில் இருந்தவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறியதால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

திருச்சி காந்தி மார்க்கெட் முன்புறமுள்ள டீ கடையில், இன்று காலை, கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து நேர்ந்தது. அப்போது, கடையில் இருந்த அனைவரும் அலறியடித்தபடி, அங்கிருந்து உடனடியாக வெளியேறினர். டீ கடையில் ஏற்பட்ட தீ, அருகிலிருந்த கடைகளுக்கும் மளமளவென பரவியது.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அரைமணி நேரம் போராடி, தீயை அணைத்தனர். எனினும், 4 கடைகள், தீயில் எரிந்து முற்றிலும் சேதமடைந்தன. தீ விபத்து நேர்ந்ததும் அங்கிருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால், நல்வாய்ப்பாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்தில் காயமடைந்த ஒருவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். இந்த தீ விபத்தில் 7 கடைகளிலுள்ள 25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானதாக தகவல் தெரிவித்தனர்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: