தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாட வேண்டாம் என கூறவில்லை – முதல்வர் விளக்கம்!!

தமிழகத்தில் விநாகயர் சதுர்த்தி விழாவை பொது இடங்களில் கொண்டாட தமிழக அரசு தடை விதித்துள்ளது. இது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் இன்று சட்டப்பேரவை கூட்டத்தில் விளக்கமளித்தார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை ஓயாத காரணத்தால் தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட நிர்வகங்களும் அந்தந்த பகுதிகளின் நோய் பரவல் நிலையை கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. கடந்த மாதம் முதல் அதிகரிக்கும் தொற்று எண்ணிக்கையால் இது மூன்றாம் அலை கொரோனா அறிகுறி என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகிறது.

அதனால் கடும் பொது மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வருகிற செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று கொரோனா வைரஸ் தாக்கத்தை கருத்தில் கொண்டு அரசு மக்கள் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், ஊர்வலங்கள் நடத்தவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இது குறித்து கட்சி தலைவர்கள் மற்ற அமைப்புகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் இன்று நடைபெற சட்டபேரவை கூட்டத்தில் முதல்வர் விநாயகர் சதுர்த்தி விழா தடை குறித்து விளக்கமளித்துள்ளார். அப்போது பேசிய முதல்வர் மத்திய அரசின் அறிவுரை அடிப்படையிலேயே விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஊர்வலங்கள், கூட்டமாக சேர்ந்து கொண்டாட மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை என்று தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் – சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!!
Back to top button
error: