தமிழ்நாடு

நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் – சிலை வாங்க அலைமோதும் கூட்டம்!

தமிழகத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாதவாறு விதை விநாயகர் விற்பனை செய்யப்படுகிறது. இதனை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோத தொடங்கி உள்ளது.

நாடு முழுவதும் உள்ள இந்துக்களால் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா தாக்கம் தீவிரமாக இறந்ததன் காரணமாக விநாயகர் சிலை ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. நடப்பாண்டிலும் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை அதிகமாக இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களில் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வீடுகளில் விநாயகர் சிலை வைத்து வழிபட தடைகள் இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து ஈரோட்டில் தமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் மூலம் செயல்படும் பூம்புகார் விற்பனை நிலையத்தில் விநாயகர் சிலைகள் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்று வருகிறது. மேலும் இங்கு 80 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரையிலான விநாயகர் சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரசாயனத்தால் செய்யப்படும் விநாயகர் சிலையை தண்ணீரில் கலப்பதால் நீர் நிலைகள் சேதமடைவது காரணமாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத விதை விநாயகர், பஞ்சலோகம், பேப்பர் கூழ், மரங்கள் போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட சிலைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தஞ்சாவூர் ஓவியம், கலைத்தட்டுகள் என பலவகை வடிவங்களில் ஆன கைகளால் செய்யப்பட்ட சிலைகள் பொது மக்களை கவர்ந்து வருகிறது. பொது இடங்களில் சிலை வைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் வீட்டில் வைத்து வழிபட தமிழக அரசு அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  திருப்பூரில் அனைத்து நாட்களும் கடைகள் இயங்க அனுமதி – வியாபாரிகள் கோரிக்கை!!
Back to top button
error: