தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுமே கொரோனா பரவல் அதிகமாக இருந்து வந்தது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசும் பலவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதாவது முழு ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கொரோனாவை கட்டுப்படுத்த முயன்றனர். மேலும், அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் எனவும், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும், பொது இடங்களுக்கு செல்லும் போது மாஸ்க் அணிந்து தான் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும், இந்த கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. இதன் பின்பு தமிழகத்தில் கொரோனா பரவல் குறைய ஆரம்பித்தது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் மக்கள் சுதந்திரமாக பொது இடங்களில் நடமாடி கொண்டிருந்தனர். இந்நிலையில், மீண்டும் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கியுள்ளது. சென்னை ஐஐடி மாணவர்களில் 100 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு விதிமுறைகளை அமல்படுத்துவது தொடர்பாக நேற்று முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதன் பின்பு, மே 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்த போவதாகவும், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் மூட போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுவரை எந்தவிதமான அதிகாரபூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் யாரும் இது போன்ற செய்திகளை நம்ப வேண்டாம் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. மேலும், தமிழகத்தில் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் எனவும், தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh