இந்தியா

டெல்லியில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமல்..!

தலைநகர் டெல்லியில் இன்று இரவு 10 மணி முதல் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மஹாராஷ்ட்ரா, உத்தரப்பிரதேசம், குஜராத், டெல்லி போன்ற மாநிலங்களில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக்‍ கொண்டே போகிறது.

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 25 ஆயிரத்துக்‍கும் அதிகமானோர் புதிதாக கொரோனா தொற்றுக்‍கு ஆளாகிவுள்ளனர். ஒரே நாளில் 160-க்‍கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று இரவு 10 மணி முதல் வரும் 26-ம் தேதி காலை 6 மணி வரை டெல்லியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

காணொலி வாயிலாக மக்‍களுக்‍கு உரையாற்றிய அவர், டெல்லி சுகாதாரத்துறை கடும் அழுத்தத்திற்கு உள்ளாகி இருப்பதாகவும், கொரோனாவைக்‍ கட்டுப்படுத்த கடும் நடவடிக்‍கை எடுக்‍க வேண்டிய நிலைக்‍கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதையும் படிங்க:  காலணியை கடித்த நாய்.. பைக்கில் கட்டி இழுத்துச் சென்ற நபரின் கொடூர செயல்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: