இந்தியா

ஹரியானா மாநிலத்தில் செப்டம்பர் 6 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – கூடுதல் செயல்பாடுகளுக்கு அனுமதி!!!

ஹரியானா மாநிலம் முழுவதும் விதிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் சில தளர்வுகளுடன் செப்டம்பர் 6 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மால்கள், திரையரங்குகளை திறப்பதற்கும் அரசு அனுமதி கொடுத்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலை பரவல் தாக்கம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகளாக விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கில் இருந்து கூடுதல் தளர்வுகளை பல்வேறு மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போதுள்ள கொரோனா சூழலை கருத்தில் கொண்ட ஹரியானா மாநில அரசு தற்போதுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை கூடுதல் தளர்வுகளுடன் செப்டம்பர் 6 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக ஹரியானா மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவில், ‘ஹரியானா மாநிலம் முழுவதும் கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்னும் பதினைந்து நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் இக்கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 23 காலை 5 மணி முதல் செப்டம்பர் 6 ஆம் தேதி காலை 5 மணி வரை அமலில் இருக்கும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அரசு கொடுத்துள்ள கூடுதல் தளர்வுகளின் படி,

 • ஹோட்டல்கள், மால்கள், உணவகங்கள் மற்றும் பார்கள் 50% இருக்கை திறனுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
 • கிளப் ஹவுஸ், கோல்ஃப் மைதானங்களில் இயங்கும் பார்கள், ஸ்பாக்கள் 50% இருக்கை திறனுடன் திறக்க அனுமதிக்கப்படுகிறது.
 • மதவழிபாட்டு தலங்களில் ஒரே நேரத்தில் 50 நபர்கள் மட்டுமே கூட அனுமதிக்கப்படுகிறது.
 • கார்ப்பரேட் அலுவலகங்கள் முழு வருகையுடன் திறக்க அனுமதிக்கப்படுகிறது.
 • அனைத்து கடைகள் மற்றும் மால்கள் திறக்க அனுமதிக்கப்படுகிறது.
 • ஜிம்கள் 50 % திறனுடன் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
 • திருமணங்கள், இறுதிச் சடங்குகள் ஆகியவற்றில் 100 நபர்கள் வரை கூடுவதற்கு அனுமதிக்கப்படுகிறது.
 • திறந்தவெளியில் நடைபெறும் கூட்டங்களில் 200 நபர்கள் வரை கலந்து கொள்ள அனுமதிக்கப்படுள்ளது.
 • சினிமா அரங்குகள் அதிகபட்சமாக 50 சதவீத இருக்கை திறனுடன் திறக்க அனுமதிக்கப்படுகிறது.
 • பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மட்டும் தேர்வுகள் நேரடி முறையில் நடத்தப்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
 • திறந்த பயிற்சி மையங்கள் இயங்குவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: