இந்தியா

மகாராஷ்டிராவில் மீண்டும் முழுஊரடங்கு அமல்..!

மகாராஷ்டிரத்தில் மும்பை, புனே, நாக்பூர் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பரவலைத் தடுக்க இரண்டு நாள் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

மகாராஷ்டிரத்தில் வெள்ளி இரவு 8 மணி முதல் திங்கள் காலை 7 மணி வரை முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் சத்திரபதி சிவாஜி ரயில் நிலையம், மாநகராட்சி அலுவலகம் ஆகியன ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

எப்போதும் வாகனங்கள் இயங்கும் பாந்த்ரா ரெக்ளமேசன், மரைன்டிரைவ் சாலைகளும் வாகனப் போக்குவரத்தின்றி இரைச்சலின்றி மிக அமைதியாகக் காணப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: