இந்தியா

அடி தூள்..!! LPG கேஸ் சிலிண்டர் புக் செய்தால் 3 முறை கேஷ்பேக் – Paytm அதிரடி அறிவிப்பு!!

Paytm செயலியின் மூலமாக சிலிண்டர் புக் செய்தால் தொடர்ந்து 3 முறை கேஷ்பேக் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுன்றி, வாடிக்கையாளர்களுக்கு வசதியாக ஆட்டோமேட்டட் ரீஃபில் போன்ற புதிய அம்சங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய அவசரமான காலகட்டத்தில் பலரும் தற்போது ஆப் வாயிலாக தான் பணபரிவர்தனையை மேற்கொள்ளகின்றனர். ஆரம்பத்தில் மொபைல் ரீசார்ஜ் போன்றவற்றிற்கு மட்டுமே ஆப் வாயிலாக பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக சிலிண்டர் புக் செய்வது முதல் அனைத்து வித பில்களையும் ஆன்லைன் வாயிலாக குறிப்பாக ஆப்களை பயன்படுத்தி தான் கட்டுகின்றனர்.

இதனை அடுத்து தற்போது மக்கள் மத்தியில் அதிகமாக பயன்படுத்தப்படும் செயலியான Paytm தங்கள்து வாடிக்கையாளர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் வகையில் சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான அம்சங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலமாக சிலிண்டரை மிகவும் சுலபமாக நாம் பதிவு செய்து கொள்ளலாம். கூடுதலாக, புக்கிங் செய்யும் போது, எளிதாக முன்பதிவு செய்வது, அதற்கான பணம் செலுத்துவது மற்றும் புக்கிங் செய்த சிலிண்டர் எந்த இடத்தில் உள்ளது போன்ற விவரங்களை கூட நாம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த செயலியில் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏதுவாக நினைவூட்டுதல் (automated refill reminders) கூட இடம் பெற்றுள்ளன. இந்த சிறப்பம்சங்கள் அனைத்தும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. இத்துடன் தொடர்ந்து சிலிண்டர்களை Paytm வாயிலாக புக் செய்தால் 3 முறை கேஷ்பேக் வழங்கப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: