விளையாட்டுஇந்தியா

சிறு வயது முதல் ஆர்வம்.. ஒலிம்பிக் போட்டிக்கு தேர்ச்சி!

இந்தியாவை சேர்ந்த இளம் வீராங்கனை அன்ஷூ மாலிக் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தேர்ச்சி பெற்றுள்ளார்.

ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த 19 வயதான அன்ஷூ மாலிக் தனது சிறுவயது முதல் மல்யுத்த விளையாட்டில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். இதை தொடர்ந்து கஜகஸ்தானில் நடந்த ஏஷியன் ஒலிம்பிக் குவாலிபயர்ஸ் போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இதனால் அவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் கடந்த வாரம் இடம்பிடித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அன்ஷூவின் தந்தை தரம்வீர், “ என் மகள் என்னிடம் மல்யுத்த வீராங்கனையாக வேண்டும் என்று கூறிய நாளிலேயே, அவரை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வைக்க வேண்டும் என்று விரும்பினேன்.அந்த ஆசை இன்று நிறைவேறிவிட்டது” என்றார்.

அன்ஷூவின் தந்தை தரம்வீர், மாமா பவன் மற்றும் சகோதரர் ஷுபம் இம்மூவரும் சர்வதேச மல்யுத்த போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்ற வீரர்கள். இவர்களைப் பார்த்து அன்ஷூ மாலிக்குக்கும் மல்யுத்த போட்டிகளில் ஆர்வம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:  காலணியை கடித்த நாய்.. பைக்கில் கட்டி இழுத்துச் சென்ற நபரின் கொடூர செயல்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: