பொழுதுபோக்கு

முட்டையே இல்லாம.. அருமையான சுவையில் பிரெட் வெஜ் ஆம்லெட்..!

தேவையான பொருட்கள்

பிரெட் ஸ்லைஸ் – 10,

பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் – சிறிதளவு,

பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், பீன்ஸ் (எல்லாம் சேர்த்து) – ஒரு கப்,

மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன்,

கடலை மாவு – ஒரு கப்,

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை

முதலில் வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், பீன்ஸ் சேர்த்து வதக்கிக்கொள்ளவும். கடலை மாவு டன் வதக்கிய பின்பு காய்கறி, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும்.

பின்னர் தவாவை சூடாக்கி, சிறிது எண்ணெய் ஊற்றி, பிரெட் ஸ்லைஸை போட்டு, அதன் மேல் ஒரு கரண்டி கடலை மாவை பரவலாக ஊற்றவும். 2 நிமிடங்கள் கழித்து மெதுவாக திருப்பிப் போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு, பொன்னிறமாக எடுக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தாளைத் தூவி, பின்பு பரிமாறவும்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: