தமிழ்நாடு

அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம் – முன்னாள் அமைச்சர் கோரிக்கை!!!

தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்ய அறிவிப்பு வெளியிட வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று, மே 7ஆம் தேதி மாநிலத்தின் புதிய முதல்வராக திமுக தலைவர் முக ஸ்டாலின் பொறுப்பேற்றார். பதவி ஏற்ற அன்று அவர் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டது. அந்த திட்டம் மூலமாக வேலைக்கு செல்லும் ஏழை, எளிய பெண்கள் மிகுந்த பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் இலவசமாக பயணம் செய்ய முடியாத பேருந்துகளில் ஏறும் பெண்களும், முதியவர்களும் கட்டணம் என்ற விவரம் தெரிந்த பின்னர் பாதி வழியில் இறக்கி விடப்படுகின்றனர் என சட்டப்பேரவையில் அதிமுக முன்னாள் அமைச்சரும், நடப்பு எம்எல்ஏ.,வுமான செல்லூர் ராஜு தெரிவித்து உள்ளார். எனவே இந்த திட்டத்தில் மாற்றம் வேண்டும் என தெரிவித்த அவர், முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

அதன் படி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளிலும் மகளிருக்கு கட்டணம் இல்லை என அறிவிப்பை முதல்வர் முக ஸ்டாலின் அறிவிக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார். ஏற்கனவே தமிழக நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட் அறிக்கையில் ஒரு அரசு பேருந்து ஒரு கிலோமீட்டர் ஓடினால் அரசுக்கு 59 ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாக தெரிவித்து இருந்தார். இந்நிலையில் செல்லூர் ராஜுவின் கோரிக்கை தற்போதைய நிதிநிலைக்கு ஏற்றதல்ல என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: